advertisement

விளாத்திகுளத்தில் புதிய சேமிப்பு கிடங்கு : முதல்வர் திறந்து வைத்தார்!

ஜூலை 04, 2025 7:33 முற்பகல் |

 

விளாத்திகுளத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கினை முதல்வர்  ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி விற்பனை குழுவிற்கு உட்பட்ட விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1.60-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மோகன்தாஸ் சௌமியன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவாசயம்)முருகப்பன் வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) விஜயகுமார் (விற்பனை கூட கண்காணிப்பாளர்) பாலமுருகன் வேளாண்மை அலுவலர் (மேளாண் வணிகம்) உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement