advertisement

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக தலைவர் விஜய் உறுதி

ஜூலை 04, 2025 11:56 முற்பகல் |

 

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement