எம்ஜிஆர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தவில்லை...! - துரை வைகோ
ஜூலை 12, 2025 8:23 முற்பகல் |
திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் 'துரை வைகோ' அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்ததாவது," அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார்.
அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை.மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார்.இந்தப் பேட்டியின்போது, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மணவை தமிழ்மாணிக்கம் உடனிருந்தனர்.
கருத்துக்கள்