advertisement

சென்னை ரூ.1.25 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்

மார். 07, 2026 7:09 முற்பகல் |

 

சென்னை: சென்​டரல் ரயில் நிலை​யத்​தில் உரிய ஆவணமின்றி கொண்​டு​வரப்​பட்ட சுமார் ரூ.1.25 கோடி மதிப்​பிலான தங்கம், வெள்ளி மற்​றும் பணத்தை ரயில்வே போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் ரயில்வே பாது​காப்பு படை​யினர் வழக்​கம்​போல் நேற்று கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது நள்​ளிரவு 12.10 மணி​யள​வில் பெங்​களூரு​வில் இருந்து சென்னை வந்த லால்​பாக் எக்​ஸ் ​பிரஸ் ரயில் பயணி​களிடம் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.அப்​போது ஒரு​வரிட​மிருந்து ரூ.47.52 லட்​சம் மதிப்​பிலான 288 கிராம் எடை​யுள்ள 4 தங்​கக் கட்​டிகள், ரூ.29.40 லட்​சம் மதிப்​பிலான 10 கிலோ எடை​கொண்ட ஒரு வெள்​ளிக்​கட்டி ஆகியவை கைப்​பற்​றப்​பட்​டன.

இந்த பொருட்​களுக்கு உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால் ரயில்வே போலீ​ஸார் இவற்றை பறி​முதல் செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர். அதில் தங்கம் கடத்தி வந்த நபர் கர்​நாடக மாநிலம் கோலார் மாவட்​டத்​தைச் சேர்ந்த வெங்​கடேஷ் என்​பது தெரிய​வந்​தது.இதே​போல நேற்று மதி​யம் 1 மணி​யள​வில் விஜய​வா​டா​வில் இருந்து சென்ட்​ரல் வந்த பினாகினி அதி​விரைவு ரயில் பயணி​களிடம் சோதனை செய்த போது பயணி ஒரு​வரிடம்இருந்து உரிய ஆவணங்​களின்றி எடுத்​து​வரப்​பட்ட ரூ.48.59 லட்​சம் பணத்தை ரயில்வே போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement