சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
ஏப். 04, 2026 4:32 முற்பகல் |
திருநெல்வேலி மாவட்டம் மேலசெவல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, கீழஓமநல்லூர் பஸ் ஸ்டாப் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த சீனிகார்த்திக் ( 35) என்பவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 17 கிலோகிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சீனிகார்த்திக்கை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து சுமார் 17 கிலோகிராம் புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.





கருத்துக்கள்