பிரதமர் மோடியால் 200 தொகுதி இலக்கை அடைந்து விடுவோம்- முதல்வர் ஸ்டாலின்
கோவை: பிரதமர் மோடி 4ஆம் தேதி தமிழகம் வருவதால், வரும் தேர்தலில் 200 தொகுதி இலக்கை அடைந்து விடுவோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று கோவை தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் மதசார்பற்ற முற்போற்க்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ஆதி் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதி தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்,தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கடந்த 2021-இல் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை. கோவையும் என் ஊர்தான் என்று சொல்லும் அளவிற்கு கோவையுடன் ஒன்றி போயிருக்கின்றேன். அதனால்தான் முதல் கட்ட பரப்புரையிலேயே கோவை வந்து விட்டேன்.
கோவை தெற்கு தொகுதியில் வெல்லும் வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு அறிமுகம் தேவையில்லை,செயல் வீரர் செந்தில் பாலாஜி, நாம் நினைத்ததை செய்து முடிப்பவர். எந்த வேலையையும் எதிர்பார்ப்பையும் மீறி செய்பவர். சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். ராகுல் காந்தி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி, ஏப்ரல் 4 ம் தேதி தமிழகம் வந்து ரோடு ஷோ நடத்த இருகின்றார் என்பதால் திமுகவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவர் வருவதால், 200 தொகுதிகள் என்ற இலக்கை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. மோடியும், அமித்ஷாவும் தமிழகம் வந்தால் நமது இலக்கை அடைய முடியும்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை கொடுக்காமல் விட்டு விட்டனர். 2035-இல் 20 லட்சத்தை மக்கள் தொகை தாண்டி இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். கோவை,மதுரைக்கு மெட்ரோ ரயிலை ரத்து செய்து விட்டு ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஆக்ராவுக்கு மெட்ரொ கொடுத்துள்ளனர். கோவையை கைபற்ற பாஜக துடிக்கின்றது. அநீதியை இழைத்து விட்டு எப்படி வருகின்றீர்கள். தமிழகத்தை பாஜக பழி வாங்குவதால், ஒட்டு சாவடிக்கு போகும் போது பாஜகவை மக்கள் நினைக்க கூடாது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.





கருத்துக்கள்