நெல்லையில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்காக நெல்லைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார்.
நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அதாவது, தி.மு.க. வேட்பாளர்களான சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்), அப்துல் வகாப் எம்.எல்.ஏ. (பாளையங்கோட்டை), சுப்பிரமணியன் (நெல்லை), காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, அம்பை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார். இரவில் அங்கு தங்கும் அவர் மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.





கருத்துக்கள்