கீழக்கரை -வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-யை, முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கலை , அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் , மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று கல்லூரியில் மாணவியர்கள் முன்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மேற்கொண்டதுடன், மாணவியர்களிடம் ஒவ்வொருவரும் வாக்குபதிவு நாளான (23.04.2026) அன்று தவறாமல் வாக்களித்து மாவட்டத்தில் அனைவரும் வாக்களிக்கப்பட்டது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து , மாணவியர்களுடன் செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து கொண்டதுடன், வாக்காளர் விழிப்புணர்வு குறித்து மாணவியர்களால் வரையப்பட்ட வண்ணக்கோலங்களை பார்வையிட்டார்.
பின்னர் , வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பதாதைகள் ஏந்தி பேரணி கீழக்கரை பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.
நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு , பேராசிரிய பெருமக்கள் , மாணவியர்கள் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்
மாவட்ட செய்தியாளர்





கருத்துக்கள்