advertisement

இரு தொகுதிகளில் போட்டி - தமிழ்ப் பேரரசு கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

ஏப். 02, 2026 6:52 முற்பகல் |

 


தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வ.கௌதமன் அறிவித்துள்ளார். 

திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தலைமையிலான தமிழ்ப் பேரரசு கட்சி, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி குன்னம் (பெரம்பலூர்) தொகுதியில் வழக்கறிஞர் அன்புத்தமிழன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர்  சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

மொழி, நிலம் மற்றும் தமிழர் அதிகாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கச் சமரசமின்றிப் போராடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும் திரையிசை மயக்கம் மற்றும் இலவச அரசியலைத் துறந்து, மக்கள் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement