advertisement

கிருஷ்ணகிரி : அம்பேத்கர் சிலை அவமதிப்பு !

ஏப். 02, 2026 5:55 முற்பகல் |

ஊத்தங்கரை அருகே வீரணகுப்பம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்துள்ளனர்.

நேற்று காலை இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்தில் திரண்டனர்.கடந்த வாரம், இப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் மாற்று சமூகத்தினர் பிணத்தைப் புதைத்ததாகவும் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றின் குழாய்களை உடைத்துச் சென்றதாகவும் எழுந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது அம்பேத்கர் சிலை அவமதிப்பு சம்பவம் தேர்தல் நேரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement