விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு காவல் நீட்டிப்பு
ஏப். 03, 2026 3:55 முற்பகல் |
தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான நபருக்கு, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது காவல் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் காணொலிக் காட்சி மூலம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, தர்மமுனீஸ்வரனுக்கு வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி அதிரடி உத்தரவிட்டார்.





கருத்துக்கள்