advertisement

சி.த. செல்லப்பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு !

ஏப். 02, 2026 7:23 முற்பகல் |

 


தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பர நகர் மற்றும் முத்தையாபுரம் பஜார் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசியதாவது: "தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக, இப்பகுதி மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த குடிநீர் திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக அரசுதான். இன்று நாம் காணும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளும் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டவை. எனவே, பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement