தூத்துக்குடி மாவட்டத்தில் பறிமுதல் செய்த ரொக்கம் எவ்வளவு ?
ஏப். 04, 2026 4:14 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில், இன்று வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள்: மொத்த ரொக்கத்தொகை: 60 லட்சத்து 98ஆயிரத்து 830.மதுபானங்கள்: ரூ.4,08,449 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போதைப்பொருட்கள்: ரூ.6,80,640 மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்