திமுக,அதிமுக, தவெக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் கே.கே. கதிரவன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.கே.கதிரவன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணபெருமாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அது சமயம் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த. திவாகரன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜோதிபாலன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா வேட்பு மனு தாக்கல் செய்தார் .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணபெருமாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அது சமயம், மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மாவட்ட முன்னாள் கழகச் செயலாளர் ஆணிமுத்து, ஜி. முனியசாமி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தவெக . வேட்பாளர் ஜி. கோபிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் தவெக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி. கோபிராஜன். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணபெருமாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அது சமயம், கட்சி மாவட்டச் செயலாளர் மதன், ஒன்றியச் செயலாளர் வைத்தியநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்