advertisement

விஜய் விவாகரத்து வழக்கு - சங்கீதா புதிய மனு

மார். 07, 2026 8:06 முற்பகல் |

 

விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான இல்லத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமர்பித்துள்ள மனுவில், ’விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு விஜய் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். விஜய் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்னை மிரட்டுகிறார்கள். தற்போது வீடு இல்லாமல் மிகவும் கடுமையாக தவித்து வருகிறேன். விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்துவருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் என்னை விஜய் அனுமதிக்க வேண்டும்.

திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும், குழந்தைகளுக்கும் சேர வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும். பலமுறை முயற்சி செய்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்.

விஜயை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் விஜயை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டேன்' என குறிப்பிட்டுள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
  • K
    Kannan U மார். 07, 2026 10:49 முற்பகல்
    இருவரும் சம உரிமையுடன் சட்டபடி பிரிந்து வாழ்ந்து கொள்ளலாம். விஜய் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாசம் தந்து தனது கடமையை செய்ய வேண்டும். இதில் இருவரும் தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.
    0 0
advertisement
advertisement
advertisement