அ.தி.மு.க.வில் இணைந்தார் காளியம்மாள்
மார். 13, 2026 5:53 முற்பகல் |
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பின் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு தற்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் காளியம்மாள். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அ.தி.மு.க. வில் இணைந்துக்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் பேசும் போது ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு. எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.





கருத்துக்கள்