advertisement

" உங்களுடன் ஸ்டாலின் "சிறப்பு திட்ட முகாம் ஆலோசனைக் கூட்டம்

ஜூலை 02, 2025 5:11 முற்பகல் |

" உங்களுடன் ஸ்டாலின் "சிறப்பு திட்ட முகாமிற்கான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  " உங்களுடன் ஸ்டாலின் " சிறப்பு திட்ட முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள " உங்களுடன் ஸ்டாலின் " சிறப்பு திட்ட முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.09.2025 தேதி வரை நடைபெறுகின்றன. 

நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் 217 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாம் நடைபெறும் தேதிக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து முகாம் நடைபெறும் நாள் அன்று அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து தெரிவித்து பயன்பெறும் வகையில் தகவல் தெரிவித்திட வேண்டும்.ஒவ்வொரு முகாமிலும் அனைத்துத்துறை அலுவலர்கள் தங்கள் பணியாளர்களுடன் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு தொடர்புடைய அலுவலர்கள் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பதை கருத்தில் கொண்டு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் , மருத்துவ முகாம்கள் அமைத்து கண்காணித்திட வேண்டும். அதேபோல் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு மனுக்கள் குறித்தும் துறைகளின் விபரங்கள் குறித்தும் தெரிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும். அதேபோல் தொடர்புடைய அலுவலர்கள் பணிகளை கண்காணித்து சிறப்பு முகாம்களை சிறந்த முறையில் வழி நடத்தி பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்திட உறுதுணையாக இருந்திட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்  தெரிவித்தார்.

கூட்டத்தில் , மாவட்ட பொறுப்பு வருவாய் அலுவலர்  ந.சரவணன் , சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement