பரமக்குடி அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் பதவியேற்பு
பரமக்குடி ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியன் ஆசிரியர் மன்ற செயலாளராக பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை ஜி.கோகிலா பதவி ஏற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை ஜி. கோகிலா பள்ளியின் ஆசிரியர் மன்ற செயலாளராக பள்ளி உதவி ஆசிரியர் கே.ஆரோக்கியதாஸ் பதவி பொறுப்பை வழங்கினார். பரமக்குடியில், பாரம்பரிய மிக்க பள்ளியில் ஆசிரியர் மன்ற செயலாளராக முதன் முதலில் பள்ளி பெண் ஆசிரியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்றுக் கொண்ட ஆசிரியை ஜி.கோகிலா பள்ளி தலைமையாசிரியர் மாயக்கண்ணன், உதவி தலைமையாசிரியர் கே. ஆரோக்கியதாஸிடம் வாழ்த்து பெற்றார். பள்ளி ஆசிரிய பெருமக்கள், பள்ளி பெற்றோர் - ஆசிரிய மன்றத்தினர்கள் , பள்ளி அலுவலர்கள், மாணவர் - மாணவியர்கள், அனைத்து பள்ளி ஆசிரிய பெருமக்கள், கல்வி - சமூக ஆர்வலர்கள் , பெற்றோர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் என பலரும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்த வண்ணமாய் உள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்