தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டி-அரசுப்பள்ளி ஆசிரியை சாதனை
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியை சூ மரியஆக்னஸ் பசுமலை தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியை சூ. மரியஆக்னஸ் பசுமலை அகில இந்திய அரசு பணியாளர்களுக்கான தடகளப் போட்டி 2025- 2026 பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. போட்டியில் , களம் கண்ட45 + வயது பிரிவில் 200 மீட்டர் கான ஓட்டப் போட்டியில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவில் கலந்து கொண்டார் .
பீகார் மாநிலம் பாட்னாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவில் சாதனை படைத்த ஆசிரியை சூ. மரிய ஆக்னஸ் பசுமலையை சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிவமணி உள்பட ஆசிரிய பெருமக்கள், மாணவர் - மாணவியர்கள், கல்வித் துறையினர்கள், விளையாட்டு - சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், நீதித்துறையினர், நகர் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ந்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமாய் உள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.





கருத்துக்கள்