advertisement

இமானுவேல்சேகரன் மணிமண்டபம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஜன. 18, 2026 2:29 முற்பகல் |

பரமக்குடியில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி , செய்தித் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின்  திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள். சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள். தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள். மேதைகள் , அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள். நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்னர், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும் சொத்து சுகங்களை இழந்தும். தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில் காந்தி மண்டபத்தில் வ.உ .சி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை. கோயம்புத்தூர் வஉசி பூங்காவில் வ.உ சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு திருவுருவச் சிலை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு திருவுருவச் சிலை. என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.

தியாகி வே.இமானுவேல் சேகரனார் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம். செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
     சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார்  ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தியாகி வே.இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  119.2023 அன்று அறிவித்தார்
       அந்த அறிவிப்பிற்கிணங்க ராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்   திறந்து வைத்து பார்வையிட்டார்.
       முன்னதாக , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
      நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழ்நாடு வருவாய் , பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு வனம் , கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி  செய்தித் துறை அமைச்சர் மு.பெசாமிநாதன், தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் , தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி  ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திநவாஸ்கனி,  ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செமுருகேசன். ஈ.ராஜா, தமிழரசி ரசிக்குமார்,  கிருஷ்ணசாமி , ஸ்டாலின் குமார். வி.முத்துராஜா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தாட்கோ தலைவர்  இளையராஜா, மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர்  முருகவேல் ராஜன், தமிழ் வளர்ச்சி , செய்தித்துறை செயலாளர வே.ராஜாராமன்,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்  சிம்ரன்ஜீத் சிங்காலோன தியாகி இமானுவேல் சேகரனார் மகள் பிரபா உள்பட அவரது குடும்பத்தினர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழகத் தலைவர் சக்கரவர்த்தி உள்பட தேவேந்திர பண்பாட்டுக் கழக நிர்வாகத்தினர் , பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், வ.சத்தியமூர்த்தி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement