இறந்த மூதாட்டி உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிப்பு
க. கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இராமாயி இறந்ததும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக அளிக்கப்பட்டது .
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கலையூர் அஞ்சல், க. கருங்குளம் கிராமத்தில் வசித்து வந்த மு.சிறுவன் மனைவி இராமாயி (விவசாயி) வயது முதிர்வின் காரணமாக அவரது இல்லத்தில் இறந்து விட்டார்.அன்னாரது உடலை அவரது குழந்தைகள் கருப்பையா,சண்முகம், முனியம்மாள்.அக்பர்ஷா, பசுமலை ஆகியோர்கள் இறந்த பிறகு பேசி முடிவு செய்து, இராமநாபுரம் அரசு மருத்துவகல்லூரிக்கு உடலை தானம் செய்தனர். மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரிய பெருமக்கள், மருத்துவ மாணவர் - மாணவியர்கள் பாராட்டினர். பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்றனர்.
அப்போது இறந்த தாயாரின் மகன்களில் ஒருவர் வழக்குரைஞர் பசுமலையிடம் கேட்டபோது இறந்த இடத்திற்கு அரசு வந்து உடலை வாங்கிச் சென்று ஆவணங்கள் பெற்றுக் கொண்டால் அழைகழிப்பு. பொருள் செலவு மிச்சமாகும்,மக்களுக்கும் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும், உடல்தானம் கொடுத்தது மனித சமூகம் அடுத்த கட்ட மருத்துவ அறிவியலில் சிறந்த ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
உடல் தானம் செய்ததை சமூக சிந்தனையாளர்கள், பொதுமக்கள், கிராமத்தினர் அனைவரும் அக்குடும்பத்தினர்களை பாராட்டினர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்