பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசு கலை கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை (ஜூன் 05) முதல் கவுன்சிலிங் தொடங்கப்படும் என தமிழக அரசு உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் ஜுன் 05 -ந் தேதி (வெள்ளி) விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவவீரர்கள் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, ஜுன். 08 -ந் தேதி (திங்கள்) பொதுப் பிரிவினருக்கு அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து அறிவியல் (பிஎஸ்சி) பட்டப் படிப்புகளுக்கான மாணவர் - மாணவியர்கள் சேர்க்கையும், ஜுன். 09 -ந் தேதி (செவ்வாய்) வணிகவியல், தொழில் நிர்வாகவியல் படிப்புகளுக்கும், ஜுன் 10 -ந் தேதி (புதன்) தமிழ், ஆங்கிலம்,வரலாறு, பொருளியல் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இது சம்மந்தமாக பொறுப்பு முதல்வர் அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் " 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05 முதல் ஜூன்.10 வரை காலை 09 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில் விண்ணப்பித்துள்ள மாணவர் - மாணவியர்கள், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் உரிய அசல் சான்றிதழ்கள் இரண்டு நகல்கள், ஆதார் கார்டு , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- வுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் , மாணவர்-மாணவியர்களுக்கு கைபேசி , குறுந்தகவல்கள், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காதவர்கள் நேரடியாக கல்லூரியை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்