ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணை தவெக நிர்வாகிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்: ”தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளி வந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர்.
இந்த லட்சணத்தில், முதல்வர் விஜய் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்! அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும்!” என்று நயினார் கூறியுள்ளார்.





கருத்துக்கள்