தூத்துக்குடி : காங்கிரஸ் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் 75 காங்கிரஸ் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.
தூத்துக்குடி தமிழக சட்டமன்ற தோ்தலுக்கு பின் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக காங்கிரஸ்கட்சியை சோ்ந்த ஓரு தரப்பினா் தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனா். தூத்துக்குடியில் 10 தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜன், முரளிதரன், ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் 40வது வாா்டு காங்கிரஸ் தலைவர் ஜோபா்னாந்து மற்றும் மிக்கேல் ரெஜினா ஈஸ்வாி வக்கீல் பட்டுராஜா, சுேரஷ், சக்திவேல், ராஜ்குமாா், முருகேசன், பிரேமா, கலா, மல்லிகா உள்பட 75 போ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உறுப்பினா் அடையாள அட்டையை வடக்குமாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவனிடம் ஓப்படைத்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அனைவரையம் வரவேற்று கீதாஜீவன் ெபான்னாடை போற்றி திமுக வேஷ்டி சேலை வழங்கி இணைத்துக்கொண்டபின் அனைவரும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைைமையையேற்றுஇணைந்த உங்களை மகிழ்ச்சியோடு வடக்கு மாவட்ட திமுக வரவேற்றுள்ள நிலையில் வரும் காலங்களில் தங்களது பகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, கருணாநிதி எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அணித்தலைவா்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணிகண்ணன், நாகராஜன், மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளர் ரவி, ஓன்றிய செயலாளர் இம்மானுவேல், பெருமாள் கோவில் அறங்காலா்குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் சாந்திமோி கமலாதேவி மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.





கருத்துக்கள்