advertisement

திருப்பத்தூரில் நர்சிங் மாணவர் தற்கொலை

ஜூன் 03, 2026 4:53 பிற்பகல் |

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவன் (20), ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் மருந்தியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெற முடியாததால் ஜீவன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மாணவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், தேர்வுத் தோல்வியால் ஏற்பட்ட மனஅழுத்தமே இந்த துயர முடிவுக்கு காரணமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement