நெல்லையில் கருணாநிதி பிறந்தநாள் விழா!
ஜூன் 03, 2026 4:41 பிற்பகல் |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக 12 வது வட்ட திமுக சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காலை உணவுபொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திமு கழகம் முன்னோடி பழக்கடை சங்கர்,12 வது வட்டகழக செயலாளர் மேகை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு காலை உணவினை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ்,கழக முன்னோடிகிட்டுப் பிள்ளை,பெட்டிக்கடைசங்கர்,போட்டோசெல்வகுமார்,மகளிர் அணி செல்வி,உட்பட பலர்நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 12 வது வட்ட செயலாளர் மேகை செல்வம் செய்திருந்தார்.





கருத்துக்கள்