advertisement

ஆர்.எஸ்.மங்கலம் : புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறந்து வைப்பு

ஜூன் 15, 2026 6:17 முற்பகல் |

ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ்  திறந்து வைத்தார் .

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டதுடன் வட்டாட்சியரை அலுவலர் இருக்கையில் அமர வைத்து சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் தரைதளம், முதல்தளம், தலைவாயில் , வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதல் தளத்தில் எழுதுபொருள் அறை, வட்டாட்சியர் (வட்ட வழங்கல் அலுவலர்) அறை, வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), பதிவு அறை, அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் , திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சீனிவாச சேதுபதி , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் , உதவி செயற்பொறியாளர் அருணகிரி , பொறுப்பு வட்டாட்சியர்  உமாமகேஸ்வரி , செய்தி -  மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள்  கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement