அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்க பொதுக்குழு கூடுகை
தூத்துக்குடியில் அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்கம் பொதுக்குழு கூடுகை நடைபெற்றது.
தூத்துக்குடி அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைகள் இயக்கம் பொதுக்குழு கூடுகை செயின்ட் மேரிஸ் காலனியில் தலைவர் ஜெயராஜ் தலைமையில், மாநில துணைத்தலைவர் மோசஸ், மாநில துணைப் பொதுச்செயலாளர் சாம் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக்குழு கூடுகையில் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எங்கு பார்த்தாலும் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக சிறுபான்மை மக்கள் அதிலும் கிறிஸ்தவர்களுடைய உரிமைகள் அதிகமாய் மறுக்கப்பட்டு வருகின்றன. ஜெபக் கூட்டங்கள் நடத்த தடை, வீட்டுக்கூட்டம் நடத்த தடை, கிறிஸ்தவர்கள் 5 பேர், 10 பேர் கூடினாலே மதமாற்றம் செய்ய வருகிறார்கள் என்று சொல்லி மதவாதிகள் எழும்பி தாக்குகின்ற நிலை காணப்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்றும் அதன் இறையாண்மை பாதுகாக்கப்படவும், அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும், சாதி மத இன பாகுபாடின்றி செயல்படவும், மாண்புடனும் கண்ணியத்துடனும் இயக்கத்தை வழிநடத்தவும் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் சாமிஜாண், துணைச் செயலாளர்கள் அண்டோ மஸ்கர்ணாஸ், மரிய கஸ்மிர் ராஜா, செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் நிக்கோலஸ் ராஜா, துணை பொதுச்செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ரதீஷ்குமார், இணைச்செயலாளர் ஜோஸ்வா நித்தியராஜ், இளைஞரணி தலைவர் ஆனந்தன், மண்டலத் தலைவர்கள் ராஜா, சிலுவை ராஜா, மாவட்ட தலைவா்கள் மோசஸ், அமலதாஸ், வடக்கு மாவட்ட மண்டல செயலாளர் சேவியர், மண்டல துணைத் தலைவர் ஆரோக்கியம், மண்டல பொருளாளர் ஜேசுபாலன், மாவட்ட இளைஞரணி தலைவர்கள் தொம்மை அந்தோணி, சாமுவேல்ராஜா, இளைஞரணி செயலாளர் அந்தோணி ராஜ், மாவட்ட செய்தித்தொடர்பாளர் ராபின்சன், மாநில மகளிரணி தலைவி சாந்தி ஜெயராஜ், மாவட்ட மகளிரணி தலைவி வக்கீல் லூயிஷா, மாவட்ட துணைத் தலைவர் பர்னபாஸ் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்