advertisement

திருநெல்வேலி : அண்ணாமலை இயக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஜூன் 14, 2026 8:52 முற்பகல் |

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில், அண்ணாமலை தலைமையில் செயல்பட்டு வரும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களாக இணைந்தனர்.

முகாமில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் நோக்கம், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு, கட்சியின் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் என்றும் அண்ணாமலை தொண்டன் ரஜினி முருகன்,
டாக்டர் செ. குணசேகர், கோ. வேல்முருகன், ரா. மகாலெட்சுமி, ஓசோ. இசக்கி,  ஆ. அரிச்சந்திர ராஜா, எஸ்.ஆர். சிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் புதிய உறுப்பினர்களை வரவேற்று, கட்சியின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக உறுப்பினர்களாக இணைந்ததுடன், அண்ணாமலையின் தலைமையில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில் தங்களையும் இணைத்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement