தூத்துக்குடி மேயாிடம் முக்கிய கோாிக்கை மனு வழங்கல்
தூத்துக்குடி நிகிலேசன்நகா் பகுதி பொதுமக்கள் சாா்பில் மேயா் ஜெகன் பொியசாமியிடம் கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நிகிலேசன்நகா் மெயின்ரோடு பகுதியில் மழைநீர் வாய்க்கால் சீரமைப்பது குறித்து பொதுமக்கள் சாா்பாக காந்திநகா் நலச்சங்க தலைவர் ஆனந்தசேகா் செயலாளர் வேல்முருகன், பொருளாளா் அகஸ்டின், கவுன்சிலா் ஜான், மற்றும் வினோத் ஆகியோா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது தூத்துக்குடி 18 வது வாா்டு நிகிலேசன்நகா் மெயின்ரோடு காந்திநகா் பூங்கா முதல் பக்கிள் ஓடை வரை கட்டப்பட்டுள்ள மழைநீா் வடிகால் வாய்க்கால் சாிவர அமைக்கப்படாததால் கழிவுநீர் மற்றும் மழைநீா் பக்கிள் ஓடையில் கலக்கும் முன்னரே நிகிலேசன்நகா் 3வது மெயின் தெருவில் நிறைந்து வௌியே வந்து ரோட்டில் தேங்கி நிற்கிறது.
இதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள நிகிலேசன் வீட்டிற்கு எதிா்புறம் கட்டப்பட்டுள்ள கல்வெட்டு சுமாா் 1 1ஃ2 அடி வரை உயரமாக கட்டப்பட்டுள்ளது. நிகிலேசன்நகா் 2வது மெயின் தெரு மேற்குபகுதியில் அதை உடைத்து சாி செய்தால் மட்டுமே வடக்கு புறம் இருந்து தண்ணீர் தெற்கு நோக்கி செல்லும். எனவே அதனை மழை காலத்திற்கு முன்பு சாி செய்து தரும்படி மேலும் இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்து தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் நிகிலேசன்நகா் 2வது மெயின் தெரு தொடா்ச்சி ஓரு பகுதி விடுபட்டுள்ளது. அந்த தெருவுக்கும் சோ்த்து சாலை அமைத்து தரவும் ஆவண செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம் என்று அந்தபகுதி பொதுமக்கள் சாா்பாக மேயா் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியுள்ளனா்.





கருத்துக்கள்