advertisement

பரமக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை-முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைப்பு

ஜூலை 14, 2026 8:35 முற்பகல் |

பரமக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது பரமக்குடி நகரம். இந்நகரைச் சுற்றிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களும் , நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் காயம்படுபவர்களும் முதலுதவி சிகிட்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதும், பின்பு மேல் சிகிட்சைக்காக ராமநாதபுரம், மதுரை கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
மக்கள் உயரிய சிகிட்சை பெறுவது எளிதாக இருக்கும் நோக்கில், கடந்த கால ஆட்சியில் இம் மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி ரூ .60.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு , சிகிட்சைக்குரியஅனைத்து வசதிகளுடன் 5 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.    இருப்பினும் சட்டமன்ற தேர்தல் வந்ததால் புதிய மருத்துவமனை கட்டடம் திறப்பு விழா காணாமல் இருந்தது.
      இந்நிலையில்,பொது மக்களும், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர்களும் மருத்துவமனையை திறப்பதற்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்ததின் பேரில்,   தற்போதைய தமிழ்நாடு அரசு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய மருத்துவமனை கட்டடத்தை திறப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து காணொளி மூலம் ராமநாதபுரம் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.      இதனை தொடர்ந்து பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்  கே . கே . கதிரவன் ஆகியோர்
குத்துவிளக்கு ஏற்றி புதிய மருத்துவமனையை பார்வையிட்டனர்.

முன்னதாக , நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்தரசன் வரவேற்றார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், பரமக்குடி வட்டாட்சியர் ராமமூர்த்தி , பரமக்குடி நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி , தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகரன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துறையினர்கள், கட்சியினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement