advertisement

விளாத்திகுளம் அருகே பெண் வெட்டிக்கொலை- நகை கொள்ளை

ஜூலை 14, 2026 9:01 முற்பகல் |

விளாத்திகுளம் அருகே பெண் வெட்டிக்கொலை; 10 சவரன் நகை கொள்ளை 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பெண்ணைக் கொலை செய்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கபடி வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரத்தைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (  62). ஓய்வு பெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6-ம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினாராம். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 10 சவரன் தங்க செயின் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதை கண்டு  , போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து , அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் நபர்தான் இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன் அடிப்படையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணிமுருகன்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருமணிமுருகன் கலாவதியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார்.
 
காலையில் கலாவதியின் உடலை பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்து போலீசாருக்க தகவல் தெரிவித்து, உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். போலீசார் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான கபடி வீரர் திருமணிமுருகன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை.,  சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement