advertisement

​நாகர்கோவில் சிறையில் கைதி உயிரிழப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஜூலை 15, 2026 6:14 முற்பகல் |

 

நாகர்​கோ​வில்: நாகர்​கோ​வில் கிளைச் சிறை​யில் கைதி அடித்​துக் கொலை செய்​யப்​பட்​டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்​டம் ஈத்​தங்​காடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்​டின் அருகே பெட்​டிகடை நடத்தி வந்​தார். கடந்த 9-ம் தேதி சபரிவர்​மன் கடை​யில் புகை​யிலை பொருட்​கள் இருந்​த​தாக கூறி, போலீ​ஸார் கைது செய்​து நாகர்​கோ​வில் கிளைச் சிறை​யில் அடைத்தனர்.

சிறை​யில் சபரிவர்​மன் நேற்று முன்​தினம் காலை திடீரென மயங்கி விழுந்​தார். உடனடி​யாக, சிறை அலு​வலர்​கள் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். அவரது மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக​வும், உடலை பார்க்கவேண்​டும் என்​றும் உறவினர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். எஸ்​பி ஸ்டா​லின், நீதிபதி ஆகியோர் நேற்று நாகர்​கோ​வில் கிளை சிறையில் சிறை காவலர்​கள் மற்​றும் சக கைதிகளிடம் விசா​ரணை நடத்​தினர். இதற்​கிடை​யில், சபரிவர்​மனின் உடலில் காயங்​கள் இருப்​ப​தாக பிரேத பரிசோதனை​யில் தெரிய​வந்​தது. இதனால், சபரிவர்​மன் உறவினர்​கள் அவரது உடலை பெற்​றுக் கொள்​ள​வில்​லை.

உதயநிதி கண்டனம்: இதனிடையே எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் வெளி​யிட்ட எக்​ஸ்​தளப் பதிவு: காவல்​துறையை தனது கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்​கும் முதலமைச்​சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்​டும். தொடர்​புடைய காவலர்​கள் மீது நடவடிக்கை எடுப்​ப​தோடு, மரணத்​துக்​குக் காரண​மானவர்​களுக்கு உரிய தண்​டனையைப் பெற்​றுத்தர வேண்​டும் என தெரிவித்துள்ளார்​.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement