தென்காசி வந்த அமைச்சருக்கு வரவேற்பு !
தென்காசி வருகை தந்த தென்காசி தொகுதி பொறுப்பு அமைச்சர் இராஜீவை தென்காசி மதிமுக மாவட்ட செயலாளர் இராம. உதயசூரியன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இராமநதி அணையின் உபரிநீரை ஜம்புநதி பகுதிக்கு கொண்டு வரும் இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் பற்றி ஆய்வு மேற்கொண்டார்கள்.ஆய்வின்போது இராமநதி - ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட செயல்பாட்டாளர் இராம.உதயசூரியன்,செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் த.வெ.க.வின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தார்கள்.
அப்போது இராமநதி - ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட செயல்பாட்டாளர் இராம.உதயசூரியன்,
அமைச்சரிடம் இந்த திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விபரத்தையும் திட்டம் தொடர தேவைப்படும் கூடுதல் நிதி ரூ37-கோடி ஒதுக்கீடு செய்ய கேட்டும் மனுவினை வழங்கினார்.அதனை கவனமுடன் கேட்ட அமைச்சர் இராஜீவ் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அத்தோடு ரூ 119-கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் கிடக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க சுற்றுச்சூழல் அனுமதியை விரைந்து வழங்கி ஆட்சியர் அலுவலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் வலியுறுத்தி மனுவினை வழங்கினார்.
.அதற்கு அமைச்சர் இராஜீவ் உச்சநீதிமன்ற வழக்கு தடையாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி அரசு நினைத்தால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துச்சொல்லி அதற்கான ஆவணங்களையும் அவரிடம் சமர்பித்தார்.
அதன்பின் அமைச்சர் அரசோடு ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பதாக உறுதியளித்தார். எளிமையோடு பழகும் தன்மையும் சொல்வதை செவிமடுத்து கேட்டு பண்போடு பதில் சொல்லும் தன்மையும் நிறைந்த அமைச்சர் இராஜீவ் விளங்குவது எதிர்கால நம்பிக்கையை தந்தது.இந்த நாட்டை இளைஞர்களாகிய உங்கள் கையில் மக்கள் ஒப்படைத்திருக்கிறார்கள்.சிறப்பாக செயல்படுங்கள் என்று வாழ்த்திவிட்டு இராம. உதயசூரியன் விடைபெற்றார்.





கருத்துக்கள்