advertisement

புன்னக்காயலில் அரசு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஜூலை 15, 2026 11:36 முற்பகல் |

 


புன்னக்காயலில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் உள்பட திருச்செந்தூர் வட்டத்தில் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பயனாளிகளுக்குக் கடன் உதவிகளையும் வழங்கினார்.ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக் கூடத்திற்கான கட்டடத்தின் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு அதன் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார்.தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement