திருச்செந்தூர் : சுமார் 80 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்!
ஜூலை 14, 2026 5:38 முற்பகல் |
புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென கடல் நீர் சுமார் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது பக்தர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடல் நீர் சுமார் 80 அடிக்கும் மேல் பின்வாங்கியதால், வழக்கமாக தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாசி படிந்த பாறைகளும், பவளப்பாறைகளும் முழுமையாக வெளியே தெரிந்தன. இதனால் அலைகளின் சீற்றம் குறைந்து, அப்பகுதி ஒரு குளம் போலக் காட்சியளித்தது.
பாறைகளில் பாசி படிந்துள்ளதால் வழுக்கி விழுந்து காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களில் மட்டும் புனித நீராடுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.





கருத்துக்கள்