பழனியாண்டவர் கலை கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் விழா
பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த் துறையும் சாகித்திய அகாதெமியும் இணைந்து நடத்திய நா. முத்துக்குமாரின் பன்முகப் படைப்புலகம் என்னும் பொருண்மையிலான உரையரங்கம் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு உரையாளர்களாக கவிஞர் இரா பூபாலன், இலக்கிய வட்டம், பொள்ளாச்சி, முனைவர். மதியழகன், மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், உடுமலை அரசு கலைக்கல்லூரி. ராஜலதா, தமிழ்த் துறைத் தலைவர், STC கல்லூரி, பொள்ளாச்சி, மீனாட்சிசுந்தரம், உதவிப் பேராசிரியர், அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, முனைவர் வேலுமணி, இணைப் பேராசிரியர், உடுமலை அரசு கலைக்கல்லூரி, காமராஜ், உதவிப்பேராசிரியர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி, பிரேமலதா , உதவிப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் முனைவர். சுப்பிரமணியன், மேனாள் ஆய்வுத் தகைசால் பேராசிரியர், அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி ஆகிய எட்டு உரையாளர்கள் கலந்து கொண்டு நா. முத்துக்குமாரின் பல்வேறு இலக்கியப் படைப்பு வடிவங்கள் குறித்தும் இலக்கியப் பாடுபொருள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வைத் தலைமையேற்றுக் கல்லூரியின் முதல்வர் முனைவர். ரவிசங்கர் தலைமை உரை நிகழ்த்தினார். அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மகேஸ்வரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவியர், பொள்ளாச்சி என் ஜி எம் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள், மற்றும் எம் கல்லூரி மாணவர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தார்கள்.





கருத்துக்கள்