advertisement

பரமக்குடியில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை - முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பு

ஜூலை 15, 2026 6:05 முற்பகல் |

பரமக்குடியில் ரூ 60.87 மதிப்பீட்டிலான புதிய கட்டட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்  காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.60.87 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .அதனை தொடர்ந்து , பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன்  ஆகியோர்  பங்கேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பரமக்குடி தற்போது 210 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 800 வெளிநோயாளிகள், 191 உள்நோயாளிகள், ஒரு மாதத்திற்கு சராசரியாக 22311 வெளிநோயாளிகளும், 1612 உள்நோயாளிகளும், மாதத்திற்கு 140 பிரசவங்கள், 44022 ஆய்வக பரிசோதனைகள், மாதத்திற்கு 255 பெரிய அறுவை சிகிச்சைகள், மாதத்திற்கு சராசரியாக 1222 சிறிய அறுவை சிகிக்கைகள் நடைபெற்று வருகிறது.
         மேலும் , மாதத்திற்கு சராசரியாக 1481 நுண்கதில் பரிசோதனை (எக்ஸ்ரே), 713 இ.சி.ஜிகளும், 1126 அல்ட்ராசவுண்டு பரிசோதனைகளும், 592 சி.டி.எஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
      பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த  மருத்துவம் , மக்கள் நல்வாழ்வு துறை மூலம்  முதலில் ரூ.9 கோடி நிதி ஒதுக்கிடும், பின்பு ரூ.48.50கோடி நிதி ஒதுக்கீடும், மொத்தமாக ரூ.57.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஐந்தாம் தளத்தில் ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டிஐபிஹெச்ஐ ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மக்களைத்தேடி மருத்துவம் ஆண்கள் , பெண்கள், கர்ப்பவாய் பரிசோதனை, பொது மருத்துவப் பிரிவு ஆணிகள் , பெண்கள், பொது அறுவை சிகிச்சை பிரிவு, இ.சி.ஜி., பாத நல காப்பகம், மருந்தகம், கணி சிகிச்சை பிரிவு, குழந்தைகள் மருத்துவ பிரிவு, எலும்பியல் மருத்துவ பிரிவு, மகளிர் நோய் மருத்துவவியல் மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவு, கா்ப்பிணிகளுக்கான எங்கேள் பிரிவு பொது ஸ்கேன் பிரிவு, நம்பிக்கை மையம், குடும்பநல பிரிவு, தடுப்புச் பிரிவு, எம்.ஆர்.ஐ.ஸ்கேன், சி.டி.ஸ்கேன், ஊடுகதிர் (எக்லிரே), இரத்தம், சளி, மலம், சிறுர் மாதிரி சேகரிக்கும் இடம், ஊசி போடும் இடம் ஆண்கள் , பெண்கள், மருந்து கட்டும் இடம், நெபுலைசேசன் அறை போன்ற பிரிவுகளும்.
    முதல் தளத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம், நிலைய மருத்துவ அலுவலர் அறை, செவிலிய கண்காணிப்பாளர் அதை, நிர்வாக அலுவலகம், மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ பின் கவனிப்பு பிரிவு 1 மற்றும் 2, பிரசவ அறை 1 மற்றும் 2, பிரசவ முன் கவனிப்பு அறை 1 மற்றும் 2, மயக்கம் மீட்பறை, அவசர அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம், காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் அறை, செவித்திறன் பரிசோதனை அறை, பல் மருத்துவப்பிரிவு, தோல் மருத்துவப்பிரிவு, சிறப்பு மருத்துவ பிரிவு (மனநலம், இருதயம்), மருத்துவ பயனாளர்கள் தயார்படுத்தும் அறை, மயக்கவியல் பரிசோதனை அறை போன்ற பிரிவுகளும், இரண்டாவது நனத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு மகப்பேறு, குடும்பநல அறுவை சிகிச்சை பிரிவு), குழந்தைகள் மருத்துவ பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பிரிவு நிலை-1, நிலை-2, மற்றும் நிலை-3 போன்ற பிரிவுகளும்.
     மூன்றாவது தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு ஆண்கள் , பெண்கள், எலும்பியல் உள்நோயாளிகள் பிரிவு, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிவு, இடைநிலை பராமரிப்பு பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, இடைநிலை மருத்துவ கண்காணிப்பு பிரிவு போன்ற பிரிவுகளும், நான்காவது தளத்தில் பொது மருத்துவ பிரிவு ஆண்கள் , பெண்கள், கூட்ட அரங்கு, கட்டண மருத்துவ பிரிவு, இடைநிலை பராமரிப்பு பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி 1 , 2, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவப்பிரிவு. முதன்மை பருந்து கிடங்கு, கட்டண மருத்துவப்பிரிவு போன்ற பிரிவுகளும்,
        ஐந்தாவது தளத்தில்  டிஐபிஹெச்ஐ ஆய்வகமும், இணைப்பு கட்டிடங்களாக நவீன சமையலறை, அமரர் அறை, மத்திய நோய் நுவர்மங்கள் ஒழிக்கப்பெற்ற விநியோகத்துறை, உயர் மின் அழுத்த இணைப்பு அறை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பிரிவுகளுடன் 190 படுக்கைகள் அதிகரித்து மொத்தமாக 400 படுக்கை வசதிகள் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பரமக்குடி  தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திருக்கரங்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
       நிகழ்ச்சியில், பரமக்குடி தாசில்தார் ராமமூர்த்தி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகராட்சி ஆணையர்  தாமரை , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் , பரமக்குடி தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.முத்தரசன் , இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.நடராஜன், செய்தி -  மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
           மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துறையினர்கள், தி.மு.க . முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த. திவாகரன், நகர்மன்ற உறுப்பினர் ஜீவரெத்தினம் உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சியினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement