கன்னியாகுமரியில் படகு சேவை திடீர் நிறுத்தம்
சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வசதிக்காக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பொதுவாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல மூன்று படகுகள் இயக்கப்படுவது வழக்கம்.
ஆனால், அதில் ஒரு படகு பராமரிப்பு பணிக்கு சென்றுள்ளதால் 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதன் படி நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு சேவை தொடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கு திடீரென படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் கேட்ட போது கடலில் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கருத்துக்கள்