advertisement

நாகர்கோவிலில் இரத்ததான முகாம்

ஜன. 26, 2026 5:19 முற்பகல் |

நாகர்கோவிலில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

77வது இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் குமரி மாவட்டம் மற்றும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 25-1-26 ஞாயிற்றுக்கிழமை காலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்டத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியில் வைத்து 
நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் ஹனீபா, துணைச் செயலாளர்கள் ‌ஜாஹிர், மஹ்லரி மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள்முன்னிலை வகித்தனர்.இந்த முகாமை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் லியோ டேவிட் துவக்கி வைத்தார்.ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் இரத்தத்தை தானமாக கொடுத்து துவக்கி வைத்தார்.இந்த இரத்த தான முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்  கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement