ராமநாதபுரத்தில் வனபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பு அவசியம் குறித்த பயிற்சி விழாவில் மாணவர், மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி " காடு காப்போம்-நாடு காப்போம் " என்ற உண்ணதநிலை உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வேண்டுகோள் வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறையின் மூலம் வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும், சவால்களும் தீர்வுகளும் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவர், மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது :
வனங்கள் என்பது மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல அவை நீராதாரமும், உயிரினங்களின் வாழ்விடம், காலநிலை சமநிலை , மனித வாழ்வில் அடிப்படை ஆதாரமாகும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும்-சவால்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் மாணவர், மாணவியர்கள் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் , நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 அரசு பள்ளிகளில் 500 மாணவர் - மாணவியர்கள் பயிற்சி பெற்றிடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை , வனத்துறை ஒருங்கிணைந்து இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு நிறைவாக மாணவர், மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில் பங்கு கொண்ட மாணவர், மாணவியர்கள் மூலம் பெற்றோர்களும், பொதுமக்களுக்கும் வன வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பது அவசியம் குறித்து தெரிந்து கொண்டு வனம் வன உயிரினங்கள் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் பங்கும் மிக அவசியமான ஒன்றாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் வளம் , வன உயிரினங்கள், மாநிலத்தில் 33 சதவீதம் யார்ச்சி பெற திட்டங்களை செயல்படுத்தி பாதுகாத்து வரப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் 22 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுதாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை கடல் பரப்பு நிறைந்த பகுதியாகும். இதேப்போல் தூத்துக்குடி மாவட்டமும், கடல்பரப்பை அதிகமாக கொண்ட பகுதியாகும். இப்பகுதிகளில் வனத்துறை மூலம் பறவைகள் சரணாலயங்கள் அதிகளவு அமைத்திட தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே , இன்றைய சூழலில் வள உயிரினங்களின் இழப்பை தடுத்து அதிக அளவில் காடுகள் வளர்த்திடவும் காலநிலை மாற்றம் போன்றவற்றை பாதுகாத்திடவும், அதிகளவு மரங்கள் வளர்ப்பதன் மூலம் போதிய அளவு மழை பெற்றிடவும். அறிவியல் சார்ந்த மேலாண்மை, சட்ட அமலாக்கம் , சமூக பங்கேற்பு குறித்து இன்றைய மாணவர், மாணவியர்கள் தெரிந்து கொள்வதுடன். தமிழ் இலக்கியங்களும் நம் முன்னோர்கள் வனப்பாதுகாப்பு சிந்தனை வலியுறுத்தும் வகையில் " காடு
காப்போம்-நாடு காப்போம் " என்ற உன்னத நிலையை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
பின்னர் , பயிற்சி பெற்ற மாணவர் , மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு வனம் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் , மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி , மாவட்ட வன அலுவலர் த.மகேந்திரன் , வனச்சகர அலுவலர் ஜெயக்குமார் , முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பரணிஸ்ரீ , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.




கருத்துக்கள்