advertisement

சென்னை :சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம்

ஜன. 29, 2026 5:40 முற்பகல் |

 

சென்னை: பிஹார் இளைஞர் கொலை செய்​யப்​பட்டு சாக்கு மூட்​டை​யில் கட்டி வீசப்​பட்ட சம்​பவத்​தில் அவரது மனை​வி, மகனும் கொலை செய்து வீசப்​பட்​டது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக பிஹாரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கடந்த 26-ம் தேதி அடை​யார், இந்​திரா நகர், 1-வது அவென்யூ சாலை​யில் கிடந்த சாக்கு மூட்​டை​யில் இளைஞர் வெட்​டுக்​கா​யங்​களு​டன் சடல​மாக இருந்​தது தெரிந்​தது. இது தொடர்​பாக சம்பவ இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்றி போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். இதில் பைக்​கில் வந்த 2 இளைஞர்​கள் சாக்கு மூட்​டையை வீசிச் சென்​றது தெரிந்​தது.

அதை அடிப்​படை​யாக வைத்து விசா​ரித்​த​போது கொலை செய்​யப்​பட்​டது பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்​பது தெரிந்​தது. மேலும் கொலை​யாளி​கள் அதே மாநிலத்​தைச் சேர்ந்த சிக்​கந்​தர் (33), நரேந்​திர குமார் (45), ரவிந்​திர​நாத் தாகூர் (45), விகாஷ் (24) உள்​ளிட்ட 5 பேர் என்​பதை கண்​டறிந்து அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு விடிய, விடிய விசா​ரித்​தனர்.

இதில் கவுரவ் குமார் மட்​டுமல்​லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22) மற்​றும் 2 வயது ஆண் குழந்தை பிர்​மானி குமார் ஆகியோரை​யும் கொன்​று, சாக்கு மூட்​டை​யில் கட்டி மத்​திய கைலாஷ் ரயில்வே பாலத்​தின் கீழ் உள்ள பக்​கிங்​ஹாம் கால்​வாய் மற்​றும் பெருங்​குடி குப்​பைக் கிடங்​கில் வீசிச் சென்​ற​தாக அவர்​கள் தெரி​வித்​தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement