அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்!
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், அஜீத் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலேயே இன்று காலை 11 மணியளவில் அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
வித்யா பிரதிஸ்தான் திடலில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், பாராமதியில் உள்ள அஜீத் பவாரின் வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றது.




கருத்துக்கள்