advertisement

பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடி - காவல்துறை எச்சரிக்கை

ஜன. 29, 2026 9:09 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனின் பகுதி நேர வேலை வாய்ப்பு (part-time job offers) என சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சமீப நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் online scams நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல்(Facebook) போன்ற சமூகவலைதளங்களில் பரப்பப்படும் போலி பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் பொதுமக்கள் குறிவைக்கப்படுகின்றனர். இவ்வகை மோசடியில் Google Maps-ல் hotels மற்றும் productsக்கு  like அல்லது review செய்வது, profiles அல்லது cars-க்கு review போடுவது, mobile apps அல்லது websitesல் வழங்கப்படும் books மற்றும் novels வாசிப்பது போன்ற எளிய செயல்களை செய்தால், எளிதில் வருமானம் கிடைக்கும் என மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அறிமுகமில்லாத நபர்களால் டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் மூலம் வழிநடத்தப்படுகின்றனர். அவர்கள் போலியான மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ அல்லது போலியான இணைதளங்களை-ஐ பயன்படுத்தவோ அறிவுறுத்துகின்றனர். ஆரம்பத்தில் நம்பிக்கை ஏற்படுத்த சிறிய தொகை இலாபமாக கொடுக்கப்பட்டு பின்னர் பெரிய முதலீடு செய்தால் பெரிய வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியும் மேலும் மற்றவர்களையும் இதில் இணைத்தால் (referral) முதலீடு செய்த தொகை ஒரு வாரத்திற்குள் திரும்ப கொடுக்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை மோசடியாளர்கள் வழங்குகின்றனர். இதனை நம்பி பெரிய முதலீடு செய்ததும் மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

எனவே பொதுமக்கள் குறைந்த முயற்சியில் அதிக லாபம் தருவதாக கூறப்படும் பகுதி நேர வேலைவாய்ப்பு அல்லது முதலீடு தொடர்பான திட்டங்களை நம்ப வேண்டாம் எனவும் மேலும் சமூக வலைதளங்களில் வரும் செய்தி அதில் உள்ள லிங்க் அல்லது மொபைல் செயலிக்கான லிங்க் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் சந்தேகத்திற்கிடமாக முதலீட்டு சலுகைகள் கிடைத்தாலோ அல்லது இதுபோன்ற சைபர் மோசடிகளில் பாதிக்கப்பட்டாலோ உடனடியா சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் பதிவு செய்யுமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை.சிலம்பரசன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்படி புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மேலும் நிதி இழப்புகளை தவிர்த்து, குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement