advertisement

கேரளா : இளம்பெண்ணை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது

ஜன. 29, 2026 6:46 முற்பகல் |

கேரளா கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைசாக் (36). இவர் தனது உறவினரான கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுடன் சிறு வயது முதலே பழகி வந்தார். பின்னர் 2 பேரும் காதலித்தும் வந்தனர். இதற்கிடையே வைசாக், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், வைசாக்கும், உறவினரான இளம்பெண்ணும் நெருங்கி பழகி வந்தனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வைசாக்கை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால், அதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்தார். இதனால் 2 பேரும் மனமுடைந்த நிலையில் பேசி வந்தனர். இதையடுத்து இனி உயிர் வாழ விரும்பவில்லை என இளம்பெண் வைசாக்கிடம் கூறியதை அடுத்து, தானும் உயிர் வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை வைசாக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து வைசாக் தனது மனைவியை அழைத்து, அந்த இளம்பெண் தற்கொலை செய்து விட்டதாக கூறினார். பின்னர் 2 பேரும் இளம்பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஏலத்தூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் வைசாக்கை பிடித்து விசாரித்தனர். அதோடு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்ததாக வைசாக் நாடகம் ஆடியதும், இறந்த பின்னர் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வைசாக்கை போலீசார் கைது செய்தனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement