வேணுவன குமாரர் திருக்கோவில் கும்பாபிஷேக பந்தல்கால் நாட்டு விழா
2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேணுவன குமாரர் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு நேற்று முதல் கணபதி ஹோமம், பாலாயம், உள்ளிட்ட விசேஷ பூஜைகளுடன் தொடங்கி இன்று பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுன் வேணுவன குமாரர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுவனக்குமாரர் திருக்கோவிலில் 175 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தல்கால் நடும் விழா இன்று காலை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்புமிகு இவ்விழாவில் நெல்லை மாநகராட்சி நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசி மணி , திருக்கோயில் பணியாளர் ரவிச்சந்திரன் , ஹரி பிள்ளை , நாராயணன் , முன்னாள் ஆசிரியர் ணபதி அவர்கள், செல் போன் ஏஜென்ட் கார்த்திக் , பக்தர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் அருள்தரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோயில் பட்டர் பிச்சையா தலைமையிலான குழுவினர் அனைத்து விசேஷ பூஜைகளையும் செய்தனர்.
மேலும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி விவரம்.
அருள்மிகு ஸ்ரீ வேணுவன குமாரர் திருக்கோவில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் ஆகும் இந்த திருக்கோவில் 1982ல் மிகவும் பழுதடைந்து வவ்வால்கள் நிறைந்து கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது அப்போது இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கோவிலை நாங்கள் பார்க்கிறோம் என்று நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தில் சாவியை வாங்கினோம்
2000 ஆண்டுகளுக்கு முன் இந்த திருக்கோவில் மூங்கில் காடுகளால் காணப்பட்டது
அந்த காலகட்டத்தில் கோவிலில் அரசமரம் சோலை மூங்கில் என சோலையாக அதிகம் காணப்பட்டது
இந்தக் கோவிலில் வந்து வழிபடும் பலர் அரசுத்துறை பல்வேறு துறைகளில் பணிக்கு சென்றுள்ளனர்
சோதனை காலங்களில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் என்னை மேயர் பதவி வழங்கி உயர்த்தி உள்ளார் இந்த வேணுவ குமாரர் என்றும் தெரிவித்தார்.1982ல் கோவிலில் மின்சாரம் இல்லை 1986இல் மின்சாரம் வழங்கி கோவிலை பராமரிக்க ஆரம்பித்தோம் என்றும் தெரிவித்தார்,இந்தக் கோவிலில் வராகி விநாயகர் நவகிரகங்கள் பைரவர் தட்சிணாமூர்த்தி சிவன் போன்ற சிலைகள் உள்ளதாகவும்
மேலும் இந்த கோவிலில் ருத்ராட்சகம் மரம் ஒன்று வைக்க வேண்டும் என்று மரம் ஒன்று வைத்தேன் ஆனால் இதுவரை துளிர்விடாத நிலையில் இப்போது முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் வேலையில் துளிர்விட்டு வளர்ந்து வருகிறது இதன்மூலம் தெரிகிறது இந்த வேணுவன குமாரரின் அருள் அனைவருக்கும் இருக்கும் என்று நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றும் 08.02.2026 அன்று காலை நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற மாநகராட்சி மேயர் அவர்கள் அன்போடு வரவேற்கின்றார்கள்.




கருத்துக்கள்