advertisement

கடலூர் : பெண்ணிடம் தங்கநகை பறிப்பு

ஜன. 29, 2026 4:53 முற்பகல் |

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வசித்து வருபவர் பூங்கோதை (வயது 51). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது மக்காச்சோள வயலுக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பூங்கோதையின் முகத்தில் துணியை போட்டு 
பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 சவரன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பறிபோன நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement