advertisement

திருச்செந்தூர் பக்தர்களுக்கு மின்விளக்குகள் : தூத்துக்குடி மேயர் தகவல்

ஜன. 29, 2026 7:28 முற்பகல் |

 


தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மேயர் பேசுகையில், "தெற்கு மண்டலத்தில் 23வது முகம் நடைபெறுகிறது இதுவரை 779 மனுக்கள் பெறப்பட்டு 719 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக ரோடுகள் மின்விளக்கு குடிநீர் இணைப்பு கேட்டு மனுக்கள் அதிகளவில் வந்து உள்ளது. இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். 

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் இதுவரை 4000 ரோடுகள் போடப்பட்டுள்ளது மேலும் ரூபாய் 32 கோடி செலவில் ரோடுகள் விரைவில் போடப்படும். தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகளவில் இருப்பதால் புதிய ரோடுகள் அமைப்பதற்காக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து முள்ளக்காடு வரை தனியார் பங்களிப்புடன் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. என்றார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சரவணப் பெருமாள் நகர்நல அலுவலர் சரோஜா, நகரமைப்பு அலுவலர் வளர்மதி மண்டல ஆணையர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துவேல், சரவணகுமார், வெற்றி செல்வன், வைதேகி, விஜயகுமார், பட்சிராஜன், ராஜகனி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர், வட்டச் செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement