advertisement

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளைகள் திறப்பு விழா

ஜன. 29, 2026 6:00 முற்பகல் |

 


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரே நாளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் / சிஆர்எம் வசதிகளுடன் கூடிய எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிலிட், தனது கிளை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று ஒரே நாளில் எட்டு புதிய கிளைகளை பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்த புதிய கிளைகள் அனைத்தும் ATM / CRM வசதிகளுடன் கூடிய நவீன டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தில் வங்கியின் 607-வது கிளையை குட்டி ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஞானசேகர் திறந்து வைத்தார். கேரளா புனலூரில் 608-வது கிளையை நகராட்சித் தலைவர் ராஜகோபால் திறந்து வைத்தார். கொழிஞ்ஞாம்பாறையில் வங்கியின் 609-வது கிளையை கவ்மா மில்க் நிறுவனத்தின் கேஎஸ் தனிகாசலம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் வங்கியின் 610-வது கிளையை ஜெயம் மெட்டல் ரூஃபிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் எம்எஸ்கே சரவணன் திறந்து வைத்தார். கர்நாடகா தும்கூரில் வங்கியின் 611-வது கிளையை ஸ்பூர்த்தி டெலவப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் சிதானந்த் திறந்து வைத்தார். குஜராத் மெஹ்சானாவில் வங்கியின் 612-வது கிளை திறக்கப்பட்டது.

அதே போல் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வங்கியின் 613-வது கிளையை பாரத் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பழனிவேல் நல்லமுத்து திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் பகுதியில் வங்கியின் 614-வது கிளையை அன்னை குழுமத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் எம்.பி ஞானதிரவியம் திறந்து வைத்தார்.

புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உயர்திரு. சலீ எஸ் நாயர் கூறுகையில், "தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 614 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி, தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் ஒரு முன்னணி தனியார் துறை வங்கியாகும் என்றார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement