வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், டிச.15-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்குச் சுமார் ரூ.9,520 உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வால், ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.14,720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிவித்தனர்.




கருத்துக்கள்